அம்மாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே அரசியல் பிடிக்கவில்லை.. பிரியங்கா காந்தியின் மனம் திறந்த பேட்டி!

அம்மாவுக்கு ஆரம்பத்தில் இருந்து அரசியல் பிடிக்கவில்லை என சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த பல வருடங்களாக அரசியலில் இருந்து வருகிறார் என்பதும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தவர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கர்நாடக மாநில தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் பிரியங்கா காந்தி தற்போது தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’பாட்டி இந்திரா காந்தி, தாய் சோனியா காந்தி ஆகிய இரண்டு துணிவான பெண்களால் நான் வளர்க்கப்பட்டேன் என்றும் 33 வயதில் மகனை இழந்த பாட்டி இந்திரா காந்தி தைரியமுடன் அரசியலில் ஈடுபட்டார் என்றும் தெரிவித்துள்ளார்

ஆனால் சஞ்சய் காந்தி இறந்த மறுநாளை அவர் தேசத்திற்கு சேவை செய்வதற்காக வேலைக்கு சென்றார் என்றும் கடமையும் சக்தியும் உள்ளவர் தான் இந்திரா காந்தி என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் சோனியா காந்தி அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே அரசியலில் ஈடுபாடு இல்லை என்றும் ஆனால் அவர் அரசியலை விரும்பாவிட்டாலும் தேசத்திற்கு சேவை செய்வதற்கான பாதையை அவர் தேர்வு செய்துள்ளார் என்றும் தன் வாழ்நாள் முழுவதும் அவர் நாட்டிற்காகவே அர்ப்பணித்து உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.