மாணவி பிரியா விவகாரம்! மருத்துவர்களுக்கு காவல்துறை அதிரடி !!

கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு மருத்துவர்கள் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், சுகாதாரத்துறை நிர்வாகம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி வருகிறது.

அதன் அடிப்படையில் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மருத்துவர்கள் பால் ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகியோரின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் மருத்துவர்களுக்கு எதிராக அறிக்கை தயார் செய்யப்பட்டால் 2 மருத்துவர்களையும் கைது செய்து விசாரணை நடத்துவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைமறைவாக இருக்கக்கூடிய மருத்துவர்களின் செல்போன் சிக்னல்களை வைத்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment