அருண் விஜய் நடித்த மாபியா என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை பிரியா பவானி சங்கர் மீண்டும் அருண் விஜய் நடிக்க இருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் முதன்முதலாக ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்பதும் இந்த படம் அதிரடி ஆக்ஷன் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்த திரைப்படம் என்றும் கூறப்பட்டது
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே மாபியா படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர் தற்போது மீண்டும் அருண்விஜய்யுடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கமல்ஹாசனின் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, ராகவா லாரன்ஸின் ருத்ரன் மற்றும் ஒரு தெலுங்கு படம் ஆகிய படங்களிலும் பிரியா பவானி சங்கர் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஹரி மற்றும் அருண் விஜய் இணையும் படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதை அடுத்து அவர் தமிழ் சினிமாவின் முன்னணி இடத்தை நோக்கி கொண்டிருப்பதாகத் தெரிகிறது