தேவையில்லாத கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு பிரியா பவானி சங்கர் நெத்தியடி பதில் !!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பிரியா பவானி சங்கர். இவர் தற்போது சினிமா துறையில் முன்னணி நடிகையாக உள்ளார்.
அந்த வகையில் மான்ஸ்டர், மாபியா, கடைக்குட்டி சிங்கம், மேயாத மான் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது தனது நேரங்களை ரசிகர்களுக்கு ஒதுக்குவது வழக்கம்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்த போது நெட்டிசன் ஒருவர் உங்கள் Bra Size என்ன என்று ஆபாசமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு சிறிதும் தயங்காமல் “மார்பகங்களை நான் வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் ஒரு ஜோடி அது உள்ளது” எனக்கூறியது சோசியம் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
