பிரியா பவானி சங்கர் கோலிவுட்டில் வேகமா வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். செய்தி வாசிப்பாளராக தனது பணியை ஆரம்பித்து, சின்னத்திரை தொடரின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் பிரியா பவானி ஷங்கர். அதனை தொடர்ந்து பட வாய்ப்பு கிடைத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளும் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் பல ரசிகர்களை பெற்றார், பின்னர் 2017ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார், இதில் வைபவ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற பல படங்களில் கமிட்டானார்.
பிரியா பவானி சங்கர் தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாட மறப்பதில்லை. அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாவில் பதில் சொல்லி வருகிறார். சமீபத்தில் அவரிடம் உள்ளாடை பற்றி ஆபாச கேள்வி கேட்ட ஒரு நபருக்கு பதிலடி கொடுத்து இருந்ததும் இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில் டேட்டிங் செல்வது பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை அவர் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் அதிகம் மெச்சுரிட்டி இருக்கும் நபர்களுடன் டேட்டிங் செல்வது கடினம் எனக் கூறியிருக்கிறார். ஏதேனும் தவறு நடக்கும் பட்சத்தில் அந்த நபர் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுவார், அந்த கோபத்தை வைத்துக் கொண்டு அதற்கு பின் நான் என்ன செய்ய முடியும் என்றும் கேட்டிருக்கிறார்.