Connect with us

அரசுப் பேருந்துகள் தனியார் மயமாகும் என்ற பேச்சுக்கே இடமில்லை – அமைச்சர் திட்டவட்டம்!!

buses 1200

தமிழகம்

அரசுப் பேருந்துகள் தனியார் மயமாகும் என்ற பேச்சுக்கே இடமில்லை – அமைச்சர் திட்டவட்டம்!!

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. இவற்றை தடுக்கும் விதத்தில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்குவதற்கான முயற்சிகள் நடப்பதாக வெளிவரும் செய்திகளுக்கு தி.மு.க அரசு இதுவரை எந்த விளக்கமும் அளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறினார்.

இத்தகைய திட்டத்தினால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் நம்பியிருக்கும் அரசுப் போக்குவரத்து கழகத்தில் தனியாரை நுழைத்தால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் இவற்றை திமுக அரசு கைவிட வேண்டும் என டிடிவி தினகரன் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அரசுப் பேருந்துகள் தனியார் மயமாகும் என்ற பேச்சுக்கே இடமில்லை எனபோக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top