News
வங்கிகள் தனியார்மயம்: மத்திய அமைச்சர் தகவல்
வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவது குறித்து மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில ஆண்டுகளாகவே குறிப்பாக பாஜக மத்திய அரசை ஆட்சி செய்து வரும் நிலையில் பல அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு சில வங்கிகளை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் மேலும் சில பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளில் எவற்றை தனியார் மயமாக்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் எதிர்ப்பையும் மீறி ஒரு சில வங்கிகள் தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் வங்கி ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
