Connect with us

சென்னை மண்டலத்தில் தனியார் ரயில்கள்: ஏலத்தில் பங்கேற்க யாரும் வரவில்லை

Tamil Nadu

சென்னை மண்டலத்தில் தனியார் ரயில்கள்: ஏலத்தில் பங்கேற்க யாரும் வரவில்லை

1860c25cd338ad09b26396b3cd593352

சென்னை மண்டலத்தில் தனியார் ரயில்களை இயக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவு செய்துள்ள நிலையில் இந்த ரயில்களை ஒப்பந்தம் எடுப்பதற்கான ஏலம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள யாரும் வரவில்லை என்பதால் ரயில்வே நிர்வாகம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது

சென்னை உள்பட நாடு முழுவதும் தனியாருடன் இணைந்து 12 மண்டலங்களில் 152 ஜோடி ரயில்களை இயக்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தனியார்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனியார் ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தனியாருடன் இணைந்து 29 ஜோடி ரயில்களை இயக்கும் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது

இதற்கான ஒப்பந்த ஏலம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த ஏலத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தனியார் ரயில்களை இயக்குவதற்கான ஏலத்தில் நிபந்தனைகள் அதிகம் இருப்பதாகவும் நிபந்தனைகளை தளர்த்தினால் மீண்டும் தனியார் ரயில்களை இயக்க தனியார்கள் முன்வருவார்கள் என்றும் கூறப்பட்டது

இதனை அடுத்து ஒரு சில நிபந்தனைகளை தளர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்றும் மீண்டும் ஏலம் கோர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top