Connect with us

போலீசார் குறித்த தனி நீதிபதி கருத்து நீக்கம்!! ஐகோர்ட் அதிரடி..

ஹை கோர்ட்

News

போலீசார் குறித்த தனி நீதிபதி கருத்து நீக்கம்!! ஐகோர்ட் அதிரடி..

போலீசார் குறித்த தனி நீதிபதி கருத்து நீக்கம்!! ஐகோர்ட் அதிரடி..

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர் நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோர்களுக்கு எதிராக மாவட்ட குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் தொடர்பாக போலீசார் தவறான புகார் என கூறி  நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

இதனை எதிர்த்து வசந்தி  உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது  இந்த வழக்கு தொடர்பான விசாரணையை  மீண்டும்  நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பான மறு விசாரணை நடத்தப்பட்டதாகவும் சிவில் வழக்கு என்பதால் காவல்துறையினர் முடித்து வைத்துள்ளதாக கூறினர்.  அப்போது வசந்தி  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காவல்துறையினருக்கு எதிராக சில கருத்துகளை பதிவு செய்தார்.

குறிப்பாக காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக டிஜிபி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று அமர்வுக்கு வந்தது.

அப்போது டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயிரை பணயம் வைத்து காவல்துறையினர் பணியாற்றுவதால் இந்த கருத்துக்கள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி போலீசார் குறித்த தனி நீதிபதி கருத்துக்களை நீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பித்துள்ளன.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top