Connect with us

சென்னையில் பரபரப்பு! தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து…

202201211529568809 Tamil News Thirupathur News Set fire to the hotel SECVPF

தமிழகம்

சென்னையில் பரபரப்பு! தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து…

சென்னை பூந்தமல்லி அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் அடுகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தொழிற்சாலையில் மெட்ரோ இரயிலுக்கு தேவையான இரும்பு தகடுகளை செய்துவருவதாக தெரிகிறது. இந்த சூழலில் தற்போது தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பெயிண்ட், மர ஜாமான்கள், கெமிக்கல் போன்றவைகள் கொழுந்துவிட்டு எரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதோடு தொழிற்சாலைகள் அருகில் வீடுகள் இருப்பதால் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவும் என அஞ்சி அப்பகுதியில் இருக்கும் மக்கள் அலறியடித்து ஓடியதாக கூறப்படுகிறது.

மேலும், தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top