Connect with us

தனியார் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி: தமிழக முதல்வர் வேதனை!!

stalin new16

தமிழகம்

தனியார் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி: தமிழக முதல்வர் வேதனை!!

கடந்த சில நாட்களாகவே மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து. குறிப்பாக கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

அந்தவகையில் நேற்றைய தினத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் கல்லூரியில் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாணவியின் தற்கொலை முயற்சி குறித்து திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா, விழிப்புரம் சிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் மாணவிகளிடம் தற்கொலை எண்ணம் கூடாது என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். சமீப கால நிகழ்வுகளால் நான் வேதனை அடைவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், எனவே கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் இக்கல்வி நிறுவனங்களில் தொழிலாக, வர்த்தகமாக நினைக்காமல் கல்வி சேவையை மீண்டும் தொடரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top