Connect with us

திருப்பூரில் தனியார் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து..!!! 22 பேர் படுகாயம்..!!!

accident 1

தமிழகம்

திருப்பூரில் தனியார் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து..!!! 22 பேர் படுகாயம்..!!!

நம் தமிழகத்தில் சாலை விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தில் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கணியூர் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் பேருந்து அப்பளம் போல் நொறுங்கிய  நிலையில் 22 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதேபோல் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் மடத்துக்குளம் தாராபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top