தனியார் வங்கியில் கொள்ளை: டிஜிபி பரிசு தொகை அறிவிப்பு!!!

நேற்றைய தினத்தில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் கைவரிசை காட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக இந்த கொள்ளை சம்பத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டு இருப்பதாக போலீசார் உறுதிசெய்துள்ளனர்.அதே போல் 32 கிலோ தங்க நகைகளை  கொள்ளையடித்த குற்றவாளிகள்  வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கொள்ளையர்கள் சென்னையை விட்டு தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று போலீஸார் கூறியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை விரைவில் பிடித்துவிடுவோம் என காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக டிஜிபி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கொள்ளையர்களை பிடித்து தரும் காவல்துறையினருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும், வங்கி கொள்ளை கும்பலை பிடிக்க சென்னை அருகே உள்ள மாவட்டங்களில் தனிப்படை போலீஸ் தேடுதல் வேட்டை அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment