இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; கதறிய பயணிகள்!

திருவையாறு அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அரியலூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளச்சி மண்டபம் என்ற இடத்தில் அரியலூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற சீனிவாசா என்ற தனியார் பேருந்தும், தஞ்சாவூரில் இருந்து அரியலூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அரசு பேருந்தில் சென்ற 20 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் காயம் அடைந்த 20 பேரில் 17 பேர் திருவையாறு அரசு மருத்துவமனையிலும், 3 பேர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.