1956 க்கு முன்னாடினாலும் சரி தந்தை சொத்தில் பெண்களுக்கு சம உரிமைதான். உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
பெண் குழந்தைகளுக்கு சீர், ஆண் குழந்தைகளுக்கு சொத்து என்ற கதையெல்லாம் மாறி 1956 ஆம் ஆண்டு ஆண்- பெண் இருவருக்கும் சொத்தில் சம உரிமை என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனால் 1956 ஆம் ஆண்டு சட்டத்தில் மூதாதையரின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு உண்டு என்று இருந்ததை 2005 ஆம் பிரிவு 6 ல் திருத்தம் செய்து மூதாதையர்களின் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை உண்டு என ஆணை பிறப்பித்தனர்.
அதன்படி பெண் குழந்தைகளும் இந்திய அரசியல் சட்ட அமைப்பு வரையறுத்துள்ள இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் சொத்தில் சம பங்கினைப் பெற்று வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் அருணாச்சலா என்பவர் 1956 ஆம் ஆண்டுக்கு முன் குடும்ப தலைவர் இறந்து விட்டால் அவருடைய ஆண் வாரிசுகளுக்கு மட்டும் தான் சொத்தா அல்லது மகள்களுக்கும் உரிமை உண்டா என்று விளக்கம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.
தற்போது அதுகுறித்த தீர்ப்பினை அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கு வகையில் வழங்கியுள்ளனர்.
அதாவது 1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் குடும்பத் தலைவர் இறந்தால் தந்தை உறவு சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு” என்று குறிப்பிட்டு உள்ளார்.
