#Breaking ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – தலைமையாசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!

இராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை மற்றும் கனமழை பெய்து கொண்டிருப்பதால் மழை பெய்து கொண்டிருக்கும் பகுதிகளில் மாணவர்களுக்கு தலைமையாசிரியர்கள் விடுமுறையை அறிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்கலாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை முதலே ராமநாதபுரம் மாவடத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் விடுமுறையை அறிவிக்கலாம் என தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை மற்றும் கனமழை பெய்து கொண்டிருப்பதால் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க கல்வி), மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு விரைவாக தெரிவிக்கப்பட்டு மழை பெய்யக்கூடிய பகுதிகளில் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்குமாறு தலைமையாசிரியர்களை மீண்டும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment