Connect with us

சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை: பெங்களூர் சிறையில் பரபரப்பு!

Tamil Nadu

சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை: பெங்களூர் சிறையில் பரபரப்பு!

ec2920e6aedd7b3dbf8a0ec451388058

சசிகலாவை அடுத்து அவருடன் சிறையிலிருந்த இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

சசிகலாவுக்கு முதலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு நுரையீரல் தொற்று பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வந்த தகவலின்படி அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது 

bce42cd55bff8f2e1a680cece5f4f036

இந்த நிலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவருடன் சிறையிலிருந்த இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட இருப்பதாக கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

இளவரசிக்கு மட்டுமின்றி மேலும் இரண்டு பெண் கைதிகள், சிறை அதிகாரிகள் உள்பட 8 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் பெங்களூர் சிறையில் இருக்கும் இளவரசிக்கும் லேசான உடல்நலம் பாதிப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

மேலும் கொரோனா பரிசோதனை முடிந்து பரிசோதனை முடிவு வெளிவரும்வரை இளவரசி உள்பட 8 பேரை தனிமைப்படுத்தவும் சிறைத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Tamil Nadu

To Top