Connect with us

பிரதமர் வருகை: சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு! டிரோன்கள் பறக்க தடை!!

drne

Tamil Nadu

பிரதமர் வருகை: சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு! டிரோன்கள் பறக்க தடை!!

நடப்பாண்டில் முதல் முறையாக தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதனால் பாஜக தொண்டர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு பிரதமர் மோடியை வரவேற்று வருகின்றனர்.

மேலும் அவர்கள் சென்னை  சாலையோரங்களில் வரிசையாக குவிந்து பிரதமர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியும் அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காவல் அதிகாரிகள் உட்பட மொத்தம் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி சென்னையில் டிரோன்கள், ஆளில்லா வான்வெளி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி டிரோன்களை பறக்க விடுவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top