ஏப்.8ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி; பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி வருகின்ற 8 ஆம்தேதி சென்னை முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கவும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தர உள்ளார்.

வருகின்ற 8 ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலமாக சென்னை வந்தடைகிறார். அவரை வரவேற்பதற்க்காக விமான நிலையத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தமிழக ஆளுநர் மற்றும் கட்சி பிரதிநிதிகள், கலந்து கொள்கிறார்கள். மேலும் விமான நிலையத்தில் இருந்து பா.ஜ. க தொண்டர்கள் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது..

இதனைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து சேலம் வரை புறப்படும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அந்த இடத்தில் பத்து நிமிடம் உரையாற்றிய பிறகு பல்லாவரம் பகுதியில் பொதுமக்களிடம் 20 நிமிடம் உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு மீண்டும் தனி விமானம் மூலமாக கேரளாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்கிறார்.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் துறை சார்பாக உச்சகட்டமாக போடப்பட்டிருக்கிறது. அதில் விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பும், முக்கிய வழித்தடங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது குறிப்பாக சென்னை முழுவதும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதில் காலை ஆறு மணி முதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய தேவை இன்றி பொதுமக்கள் வெளியே வர அனுமதி இல்லை என சென்னை காவல்துறை சார்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.