மே 26ம் தேதி தமிழகம் வருகிறார் மோடி ஜி!! எதற்காக தெரியுமா ?

தமிழகத்தில் வருகின்ற மே 26-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நெடுஞ்சாலைத்துறையின் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள தமிழகம் வருவதாக தகவல்கல் வெளியாகியுள்ளன.

அப்போது பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சுமார் ரூ. 12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதாக அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழக முதல்வரை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் பிரதமரிடம் முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கையில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடி சூழல், நீட் விலக்கு மசோதா போன்ற கோரிக்கைகளை தமிழக முதல்வர் முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment