திருவள்ளுவர் தினம்: திருவள்ளுவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் !

இன்றைய தினம் தமிழகத்தில் மாட்டுப் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக உறவுக்கு உறுதுணையாக இருக்கும் மாட்டிற்கு அனைவரும் பொங்கல் வைத்து கொடுத்தனர்.  தமிழகத்தில் மாட்டுப்பொங்கல் மட்டுமில்லாமல் திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படுகிறது.

திருவள்ளுவர் தமிழர் என்பதை தாண்டி உலகிற்கு திருக்குறளை கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரது திருக்குறள் தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது.

திருவள்ளுவர் தினத்திற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதோடு மட்டுமில்லாமல் பல தலைவர்களும் தின வாழ்த்துக்களை மக்கள் மத்தியில் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி திருவள்ளுவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அதன்படி பன்முகத்தன்மை கொண்ட அறிவுசார்மிக்க திருவள்ளுவரின் நன்னெறிக் கோட்பாடுகள் அனைத்தும் தனித்து நிற்கின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.

திருவள்ளுவர் தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்தார். கடந்த ஆண்டு குமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையில் வீடியோவை வெளியிட்டு பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

<blockquote class=”twitter-tweet”><p lang=”ta” dir=”ltr”>திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை &amp; அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை &amp; விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன். <a href=”https://t.co/l15sJhD5CR”>pic.twitter.com/l15sJhD5CR</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href=”https://twitter.com/narendramodi/status/1482185219625332739?ref_src=twsrc%5Etfw”>January 15, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment