
செய்திகள்
நாளை சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!!
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதமர் மோடி நாளை பிற்பகல் 3.55 மணிக்கு ஐதராபாத் விமான நிலையத்தில் புறப்படுகிறார். பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து மாலை 5.10 மணிக்கு வந்து இறங்குகிறார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைசர்கள், பாஜக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்க உள்ளதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐஎன்எஸ் அடையாறுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைகிறார். பின்னர் சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாலை 5.45 மணிக்கு பிரதமர் வருவார்.
நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சுமார் 5.45 மணிக்கு வரும் பிரதமர் மோடி இரவு 7 மணிவரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மீண்டும் அங்கிருந்து இரவு 7.05 மணிக்கு புறப்பட்டு 7.35 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடைகிறார். மேலும், 7.40 மணிக்கு இந்திய விமானப் படை ஐ.ஏ.எப், பிபிஜே விமானத்தில் புறப்பட்டு டெல்லிக்கு 10.25 மணிக்கு செல்கிறார்.
