Connect with us

நாளைய தினம் பிரதமர் மோடி ஆலோசனை!! ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்பு;

modidi

செய்திகள்

நாளைய தினம் பிரதமர் மோடி ஆலோசனை!! ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்பு;

நாளைய தினம் பிரதமர் மோடி ஆலோசனை!! ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்பு;

நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினார். ஏனென்றால் தமிழகத்தில் திடீரென்று கொரோனாவின் பாதிப்பு ஏறுமுகமாக காணப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதனால் நாளைய தினம் பிரதமர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. அதன்படி டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

இதனால் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கொரோனா   தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் முகக்கவசம் அணிய வில்லை என்றால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக நாளையதினம் ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநில முதலமைச்சர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top