Connect with us

இளம் மேதை பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர் மோடி டுவிட்!!

Chess 984669153 1580178014

செய்திகள்

இளம் மேதை பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர் மோடி டுவிட்!!

இளம் மேதை பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர் மோடி டுவிட்!!

தலைநகர் சென்னையில் பிறந்த பிரக்ஞானந்தாவுக்கு சிறுவயதில் இருந்தே செஸ் விளையாடுவது கொள்ளை பிரியம். அந்த வகையில் தனது 5 வயதில் செஸ் விளையாட களமிறங்கிய பிரக்ஞானந்தா தனது ஏழாவது வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்திற்கு வசப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இளம் செஸ் பட்டியலில் தனது பெயரை 5 வது நபராக பதிவு செய்துள்ள  பிரக்ஞானந்தா  கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பட்டத்தை தட்டிச்சென்றார்.

இவ்வளவு திறமைகள் கொண்ட பிரக்ஞானந்தாவிற்கு குரு என்றால் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த் தான் திறமையாக விளையாடுவதை கற்றுகொடுத்தார்.

இதனிடையே ஆன்லைன் வழியாக நடைபெறும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர். 1 செஸ் வீரரான கார்ச்சனை எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.

இவருக்கு வாழ்த்து  தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தாவது:

இளம் மேதை ஆர் பிரக்ஞானந்தாவின் வெற்றியில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் புகழ்பெற்ற சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவர் வெற்றி பெற்றதற்காக பெருமைப்படுவதாகவும் திறமையான பிரக்ஞானந்தாவின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top