செய்திகள்
கொரோனா பரவல்: அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை !!
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.
கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக மகாராஷ்டிரா, குஜராத், உத்திரபிர தேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, நாளை பகல் 12:00 மணிக்கு, மாநில முதல்வர்களுடன், கணொலி வாயிலாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரி போன்றவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் அவர்கள் கொரோனா அதிகரிக்கும் நிலைப்பாட்டை குறித்து விளக்கம் அளிப்பார் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றனர். மேலும், பல்வேறு மாநிலங்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
