குஜராத்தில் சாலை விபத்து…. 7 பேர் பலி… பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு..!!

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் ஆட்டோ மற்றும் கன்டிரெய்லர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 7 பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் அடுத்த தர்ஜிபூரா பகுதியில் ஆட்டோ மற்றும் கன்டிரெய்லர் லாரி நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. அப்போது 7 பேர் பலியான நிலையில் 7 பேர் காயமடைந்தனர்.

பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி: முதல்வர் புஷ்கர் சிங் இரங்கல்..!!

இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சூழலில் விபத்து குறித்து தகவலறிந்த பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதன் படி, சாலை விபத்தில் உயிர் இழந்தது வேதனை அளிப்பதாகவும், உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். அதே போல் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

தொடர் விடுமுறை…. வண்டலூர் பூங்காவிற்கு படையெடுக்கும் மக்கள்.!!!

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment