Connect with us

வாள் வீச்சு போட்டியில் தோல்வி அடைந்த பவானி தேவிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

News

வாள் வீச்சு போட்டியில் தோல்வி அடைந்த பவானி தேவிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

252334c1c772e35a25d4a15a8bade0d3

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இந்தியா சார்பில் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்று போராடி தோல்வி அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பவானிதேவி பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார் 

அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது நீங்கள் உங்கள் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தீர்கள். அதுதான் முக்கியம். வெற்றியும் தோல்வியும் வாழ்வின் ஒரு அங்கம். உங்கள் பங்களிப்பை கண்டு இந்த தேசமே பெருமை கொள்கிறது. இந்திய மக்களுக்கு நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன் என்று தெரிவித்துள்ளார்

பிரதமர் மோடியின் இந்த டுவிட்டர் போது வைரலாகி வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானிதேவி முதல் சுற்றில் வெற்றி பெற்றார் என்பதும் அதன் பின் இரண்டாவது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

ஏற்கனவே பவானிதேவி தோல்வி அடைந்ததற்கு பல பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top