Connect with us

பிரதமர் மோடி: “அமெரிக்க பயணம்” டெல்லியிலிருந்து புறப்பட்டார்!!

News

பிரதமர் மோடி: “அமெரிக்க பயணம்” டெல்லியிலிருந்து புறப்பட்டார்!!

dc33eb9f4529be8f9ca18c16a08003c1

தற்போது நம் இந்தியாவில் மிகப் பெரிய கட்சியாக உருமாறியுள்ளது பாஜக. மேலும் பல மாநிலங்களில் பாஜகவிற்கு தொடர்ந்து வரவேற்பு காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் பாஜக படிப்படியாக வளர்ந்து கொண்டே வருகிறது என்றே கூறலாம். மேலும் தற்போது தமிழகத்தில் பாஜகவின் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நம் இந்தியாவின் பிரதமராக காணப்படுகிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.6209c87a421eb220487f5ce3fb4b05de

மேலும் அவர் ஆட்சிக்கு வந்த தொடக்கத்தில் பல நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்த வெளிநாட்டு பயணம் அதிகமாக மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பாரத பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார். மேலும் அவர் டெல்லியிலிருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செப்டம்பர் 24ம் தேதி வாசிங்டனில் குவாட் தலைவர்கள் மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். மேலும் செப்டம்பர் 25ஆம் தேதி  ஐநா பொது சபையில் பங்கேற்று பேசுகிறார். மேலும் இந்த மூன்று நாள் அமெரிக்கப் பயணத்தில் இந்திய அமெரிக்க நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் மண்டல மற்றும் உலகளாவிய விவகாரங்களில் இரு நாட்டு நலன் குறித்தும் அமெரிக்க அதிபருடன் பேச்சு நடத்த உள்ளேன் என்றும் பாரத பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமருடன் நானும் பங்கேற்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தோ பசுபிக் மாநாட்டில் எதிர்காலத் திட்டங்களில் முன்னுரிமையை அடையாளம் காண்பதற்கான ஒரு வாய்ப்பாக இது அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்தவும் , ஜப்பான் ஆஸ்திரேலியா உடன் உறவுகளை ஒருங்கிணைக்கவும் வாய்ப்பாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top