இந்தியாவில் 5ஜி சேவை… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!!

இந்தியாவில் முதற்கட்டமாக டெல்லி, மும்பை,சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவையை இந்திய மொபைல் மாநாட்டில்  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற உரையாடலில் இந்தியாவில் விரைவில் 5 ஜி சேவையானது தொடங்க இருப்பதாக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

இத்தகைய சேவையானது 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் கதிர் வீச்சின் அளவு குறித்து உலக சுகாதார ஆணையம் பரிந்துரைந்த அளவை விட குறைவாக உள்ளதாகவே இருப்பதாக கூறினார்.

இந்நிலையில் முதற்கட்டமாக டெல்லி, மும்பை,சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 13 நகரங்களில் இத்தகைய சேவையானது தொடங்க இருப்பதாக கூறிய நிலையில், சமீபத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைப்பெற்று முடிந்தது.

இன்றைய தினத்தில் மொபைல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment