பிரதமர் மோடி சக்திவாய்ந்த தலைவர்; அவர் சொன்னால் புடின் கேட்பார்!

நேற்றைய தினம் ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டின் மீது போர் புரிய தொடங்கியது. இதன் விளைவாக உக்ரைனில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் ரஷ்யா குண்டு மழை பொழிந்தது. ரஷ்யாவுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்று ரஷ்யா, உக்ரைன் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் இந்தியா நடுநிலை தன்மையுடன் உள்ளதாக ரஷ்ய தூதர் ரோமன் கூறியுள்ளார். இந்தியாவின் இத்தகைய நிலைப்பாடு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் உக்ரைன் தூதர் போரை நிறுத்த இந்தியாவின் உதவி வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போரை பிரதமர் மோடி தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கான தூதர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக உள்ளார் என்றும் இந்தியாவுக்கான உக்ரேன் தூதர் ஐகோர் பொலிக்கா கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் புடின் எத்தனை உலகத் தலைவர்களின் பேச்சைக் கேட்பார் என தெரியவில்லை என்றும் இந்தியாவுக்கான தூதர் கூறியுள்ளார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி சொன்னால் ரஷ்ய அதிபர் புடின் கேட்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் உக்ரேன் தூதர் ஐகோர் பொலிக்கா கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment