உத்தரகாண்டில் உரை: காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி மறைமுகமான குற்றச்சாட்டு!

இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்பு வலிமையான கட்சியாக காணப்பட்டது காங்கிரஸ். நாட்கள் செல்ல செல்ல இந்தியாவில் பல கட்சி ஆட்சி முறை வந்தது. இதனால் காங்கிரஸின் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

மோடி

இந்த நிலையில் தற்போது மத்திய பாஜக உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். தற்போது மோடி காங்கிரஸ் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதன்படி பல முறை ஆட்சி செய்தவர்களிடம் மக்களின் வாழ்வை எளிமையாக்க எந்த திட்டமும் இல்லை என்று பிரதமர் மோடி மறைமுகமாக காங்கிரசை கூறியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு பேசினார். சில அரசியல் கட்சிகள் ஒரு சார்பினர் மட்டுமே பயனடையும் வகையில் தங்கள் திட்டங்களை அமல்படுத்துவதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஆனால் பாஜக அரசு எந்த பாகுபாடுமின்றி அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் எங்கள் திட்டங்களை கொண்டு வருகிறது என்றும் நரேந்திர மோடி கூறினார். அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பது தான் முக்கியமான குறிக்கோள் என்று பிரதமர் மோடி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment