“16ஆம் தேதி” முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

820028c86c96ad9fb50e7bd677884dd8-1

தற்போது நம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் பெரும்பாலும் பல மாநிலங்களில் நோய்த் தொற்றானது படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல கடந்து செல்கின்றனர். இந்த சூழலில் சில வாரங்களுக்கு முன்பு வரை இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பலரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி இந்திய பொருளாதாரமும் சற்றே குறைவாக காணப்பட்டது.b421492acfa132d737b6283f1ce9a674

இந்த சூழலில் அடிக்கடி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கால் மூலம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்வார். இந்த சூழலில் மீண்டும் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அது வருகின்ற 16ஆம் தேதி மாநில முதலமைச்சர்கள் உடன் காணொளி மூலம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆந்திரா கர்நாடகா கேரளா ஒரிசா முதல்வர்கள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது மேலும் தடுப்பூசி மற்றும் தடுப்பு பணிகள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment