Connect with us

ஆட்சியை இழக்க போகிற பிரதமர்? நாடாளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு! இன்னும் சில நேரத்தில் வாக்கெடுப்பு!!

imran khan

News

ஆட்சியை இழக்க போகிற பிரதமர்? நாடாளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு! இன்னும் சில நேரத்தில் வாக்கெடுப்பு!!

ஆட்சியை இழக்க போகிற பிரதமர்? நாடாளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு! இன்னும் சில நேரத்தில் வாக்கெடுப்பு!!

கடந்த சில நாட்களாக அதிகமாக பேசப்பட்டு வருவது பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் தான். ஏனென்றால் பாகிஸ்தானில் இம்ரான் கானின் அரசு எப்போது வேண்டுமானாலும் மாற உள்ள நிலையில் தான் காணப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்க்கட்சியினர் இம்ரான்கான் அரசை கலைப்பதற்கு பல்வேறு விதமான முயற்சிகள் செய்து கொண்டு வருகின்றனர். அதன்படி பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் அரசு கவிழ்கிறது.

இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது சற்று நேரத்தில் வாக்கெடுப்பு நடக்க உள்ளது. 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கானின் பிடிஐ கட்சியை சேர்ந்த எம்பிகளில் 22 பேர் மட்டுமே அவைக்கு வந்துள்ளதால் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றும் அதற்கு எம்பிக்கள் 176 பேரவைக்கு வந்துள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் எதிராகவும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளதால் நாடாளுமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 8 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு நாடாளுமன்ற நுழைவாயிலில் மூடப்பட்டுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top