Connect with us

தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது: 7 பிரிவுகளில் வழக்கு!

News

தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது: 7 பிரிவுகளில் வழக்கு!

2ab7a1d213700dc979cea8e8fb8591bf

பாரதமாதா குறித்தும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும் பாரதமாதா குறித்து அவர் பேசிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் சிறுபான்மையினர் போட்ட பிச்சைதான் திமுக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறியது திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வன்முறையை தூண்டியதாக பொன்னையா மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதனையடுத்து அவர் தலைமறைவாகி நிலையில் தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top