18 வயது மாணவியிடம் சில்மிஷம்; பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் கைது – தட்டித்தூக்கிய தனிப்படை போலீசார்!

கன்னியாகுமரி மாவட்டம் மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியாராக இருப்பவர் கொல்லங்கோட்டை அடுத்த சூழாலை சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, இவர் அழகிய மண்டபத்தை அடுத்த பிலாங்காலை தூய விண்ணோற்ப்பு அன்னை ஆலயத்தின் பங்குதந்தையாக இருந்து வருகிறார், இவர் ஆலயத்துக்குக் வரும் பல இளம் பெண் களிடம் நெருக்கமாக பழகி பல பெண்களிடம் பாலியல் தொடர்பு வைத்த உள்ளதாக புகார்கள் எழுந்தன.

குறிப்பிட்ட பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் ரீதியாக உறவு வைத்திருப்பந்ததாக அவர் மீது புகார்கள் எழுந்த நிலையில், கடந்த வாரம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் பங்குத்தந்தையிடம் சென்று நியாயம் கேட்டு உள்ளனர். அப்போது பங்குதந்தை தான் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என கொல்லங்கோடு பகுதிக்கு அழைத்து சென்றுஉள்ளார், அங்கு திடீரென இந்த இளைஞர் களை சிறை பிடித்து. வீட்டில் திருட வந்ததாகவும் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து. நாகர்கோவில் பார்வதி புரத்தை சேர்ந்த ஜாண் மற்றும் ஆஸ்டின் ஜினோ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பாதிரியார் பெண்களுடன் தனிமையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டன.

குறிப்பாக பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நர்சிங் கல்லூரி மாணவி பாலியல் தொந்தரவு செய்ததாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்து வந்த பாதிரியார் பாதிரியார் பெனடிக்ட் அன்றோவை இன்று தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.