திருச்சியில் 4 நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி! பொதுமக்கள் மகிழ்ச்சி; வியாபாரிகள் கவலை!
நம் தமிழகத்தில் மெல்ல மெல்ல கோடை காலம் நெருங்கி விட்டது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரிக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் எதிர்பாராத விலை வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது.
அதன்படி திருச்சியில் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பொதுவாக தமிழகத்தின் மத்திய மாவட்டங்கள் பெரும்பாலும் வெங்காயம் சாகுபடி செய்வர்.
இந்த நிலையில் திருச்சியில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர். திருச்சி காந்தி மார்க்கெட்டில் கிலோ ரூபாய் 60 க்கு விற்று வந்த சின்ன வெங்காயம் தற்போது ரூபாய் 25 க்கு விற்கப்படுகிறது.
சின்ன வெங்காயத்தின் விலை கடந்த 4 நாட்களாக படிப்படியாக குறைந்து உள்ளது. இதனால் தற்போது ரூபாய் 25 க்கு விற்கப்படுவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த விலை வீழ்ச்சியால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் அதிகளவில் தேக்கம் அடைந்துள்ளது. சின்ன வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
