
Entertainment
எம்மாடியோ..! கீர்த்தி சுரேஷின் ஜொலிஜொலிக்கும் ஆடையின் விலை இத்தனை லட்சமா ?
சினிமா திரையுலகில் ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் போன்றவற்றில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தனது தந்தையின் தயாரிப்பில் வெளியான ‘பைலட்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பின்னர் ’இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து தற்போது கலக்கி வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, பைரவா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களான மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ், சமூத்திரக்கணி, நதியா ஆகியோர் நடித்துள்ள சர்காரு வாரி பட்டா படம் வரும் 12- ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் விழா ஒன்றில் ஆடம்பர உடை ஒன்றை அணிந்துள்ளார். இந்த ஆடையின் விலை சுமார் 6 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடையில் ஜொலி ஜொலிக்கும் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது தான் இதன் அம்சம் என கூறப்படுகிறது. இந்த ஆடையின் விலையை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
