Connect with us

கர்ப்பிணி பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய் தூள் கலந்த ரசத்தை ஊற்றி… கரண்டியால் கொடூரமாக தாக்கிய கணவன்!

crime

செய்திகள்

கர்ப்பிணி பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய் தூள் கலந்த ரசத்தை ஊற்றி… கரண்டியால் கொடூரமாக தாக்கிய கணவன்!

நிறைமாத கர்ப்பிணியின் பிறப்புறுப்பில், மிளகாய்த் தூள் கலந்த ரசத்தை ஊற்றி, குழம்பு கரண்டியால் சரமாரியாக குத்திய, கொலைகார கணவனின் கொடூர செயலால், உயிருக்கு ஆபத்தான நிலையில் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்கும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த கோ.பவழங்குடி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ்-வாசுகி என்பவரின் மகன் மணிராஜ் (டிரைவர்) இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு, அதே ஊரை சேர்ந்த மதியழகன் – நிர்மலாராணி என்பவரின் மகள் சர்மிளாபானு (வயது-24) டிப்ளமோ நர்சிங்படித்துள்ளார் இவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் காதலித்து திருமணம் செய்த நாள் முதல், மணிராஜ், சர்மிளாபானு மீது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

தகராறில் ஈடுபடும்போது, சர்மிளாபானு பலமுறை கோபப்பட்டு, தன் தாய் வீட்டிற்கு செல்வதும், பின்னர் சமாதானம் செய்து வைத்து, கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் சம்பவங்களும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டு, சமாதானம் செய்து கணவனின் வீட்டில் இருந்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, மணிராஜ் அதிக மதுபோதையில் மீண்டும் தனது காதல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது கோபத்தின் உச்சத்துக்கு சென்ற மணிராஜ், நெஞ்சை பதற வைக்கும் வகையில் கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டது அக்கிராமத்தையே உலுக்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் , 8 மாத கர்ப்பிணியாக இருக்கக்கூடிய, தனது மனைவியை, முழு நிர்வாணப்படுத்தி, கைகால்களை கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்து, வீட்டினுள் சாப்பிடுவதற்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த ரசத்துடன், மிளகாய் தூளை கலந்து, அப்பெண்ணின் பிறப்பு உறுப்பில் ஊற்றியுள்ளான். மேலும் அப்பெண்ணின் பிறப்பு உறுப்பில், குழம்பு கிண்டும் கரண்டியால், சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்து போன அப்பெண், ரத்தவெள்ளத்தில் சுயநினைவு இழந்து வீட்டிற்குள் கிடப்பதை பார்த்த, மணிராஜ் – யின் தாயார் மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கே சிகிச்சை அளிக்க முடியாது என கூறியதாக சொல்லப்படுகிறது.

பின்னர் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் அப் பெண்ணின் பிறப்பு உறுப்பில் 25 தையல்கள் போடப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் கொடுமையான வலியால், தாங்க முடியாத அவதியடைந்து மயக்கம் அடைந்ததால், மீண்டும் அவசர ஊர்தி மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவத்தால் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top