தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பல சாலைகள், தெருக்கள் போன்ற அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனை தமிழக அரசு விரைந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து தமிழகத்தின் அமைச்சர் வேலு சில முக்கிய அறிவிப்புகளை கூறியுள்ளார்.
அதன்படி ஈரடுக்கு மேம்பாலம் பணிகளை விரைந்து நிறைவேற்ற அழுத்தம் அளித்து வருவதாக அமைச்சர் வேலு கூறியுள்ளார். மதுரவாயல் தொடங்கி துறைமுகம் வரை மேம்பால பணிகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற தூண்டுகோலாக இருப்போம் என்று அமைச்சர் வேலு கூறியுள்ளார்.
சென்னையில் மழையால் சேதமுற்ற சாலைகளை சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் வேலு இவ்வாறு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். மாதாவரம் தொடங்கி செங்குன்றம் சாலையில் கட்டப்படும் மழை நீர் வடிகால், சிறுபாலம் கட்டும் பணிகளை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார் .
பாடியநல்லூர் வெளிவட்ட சாலையில் கட்டப்பட்ட மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார் அமைச்சர் வேலு. அதோடு மட்டுமில்லாமல் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நினைவிடம் அமைக்கும் பணிகள் மிக விரைவில் தொடங்க உள்ளதாகவும் அமைச்சர் வேலு கூறியுள்ளார்.