புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை மையம் எச்சரிகை!

தமிழகத்தில் வருகின்ற 14-ம் தேதி வரையில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற் பகுதியை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் வருகின்ற 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக இருக்கிறது.

மோசமான வானிலை: தான்சானியால் பயணிகள் விமானம் விபத்து!!

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி கடல் பகுதியை நோக்கி வலுவடைய கூடுமென வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் நவ.11-ம் தேதி வரையில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதே போல் நவ.12,13 தேதி வரையில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார்!! இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

மேலும், நாளை மறுநாள் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுவது குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment