
Entertainment
கலவரத்தில் முடிந்த செய்தியாளர்களின் சந்திப்பு – விக்னேஷ்க்கு தேவையா இதுலாம்?
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த 2015 ஆண்டு வெளிவந்த நானும் ரெளவுடிதான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது.
இதனிடையே இவர்கள் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது, பல வழிப்பாட்டு தளங்களுக்கு ஒன்றாக செல்வது என கடந்த 6 ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக டூயட் பாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் 9-ஆம் தேதி நடைப்பெற இருக்கும் நிலையில் வரும் 11- ஆம் தேதி தம்பதியினராய் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தங்களது தனிப்பட்ட வாழ்கையிலும் அனைவரது ஆசீர்வாதம் தேவை என குறிப்பிட்டுள்ளார். அதோடு இவர்களது திருமணம் திருப்பதியில் நடைப்பெற இருந்ததாகவும் ஆனால் அங்கு ஒரு சில பிரச்சனைகள் இருப்பதால் சென்னை மாமல்லப்புரத்தில் மாற்றப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும், இவர்களது திருமணத்திற்கு பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய தொழில் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
இது எல்லாம் ஒரு புறம் இருக்க இயக்குநர் விக்னேஷ் சிவன் செய்தியாளர் சந்திப்பில் முன்னணி பத்திரிகை செய்தியாளரைத் தாக்க முயன்றதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது ,அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.
நடிகை சதா மிஸ் செய்த பிளாக் பஸ்டர் படம்.. என்ன படம் தெரியுமா?
