Connect with us

ஜனாதிபதி மாளிகை சுற்றுலா பயணிகளுக்காக திறப்பு!

News

ஜனாதிபதி மாளிகை சுற்றுலா பயணிகளுக்காக திறப்பு!

eefc7bb70ffd669ed43e3cb782fdbe87

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜனாதிபதி மாளிகை மற்றும் அதில் உள்ள அருங்காட்சியகங்கள் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தற்போது ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 1முதல் சுற்றுலா பயணிகளுக்காக ஜனாதிபதி மாளிகையும் அதன் அருங்காட்சியகம் திறக்கப்படும் என்றும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து கொண்டு பார்க்க வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் நேரம் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்: தினமும் காலை 10.30 முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 12.30 முதல் 1.30 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரை ஒரு பிரிவுக்கு 25 பேர் வரை மூன்று பிரிவுகளில் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர்

செவ்வாய் முதல் ஞாயிறு வரை வாரத்தின் ஆறு நாட்களில், காலை 9.30 முதல் 11 மணி வரை, காலை 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 1.30 முதல் 3 மணி வரை மற்றும் பிற்பகல் 3.30 முதல் மாலை 5 மணி வரையிலான முன்பதிவு செய்தவர்கள் மட்டும் ஒரு பிரிவுக்கு 50 பேர் என நான்கு பிரிவுகளில் ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top