Connect with us

2009 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி கொடி-இன்று ஸ்டாலின் கையில்;

president flag

செய்திகள்

2009 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி கொடி-இன்று ஸ்டாலின் கையில்;

தமிழ்நாடு காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவரின் சிறப்பு கொடியை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். சென்னையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவரின் கொடியை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.

குடியரசு தலைவரின் கொடியை தமிழ்நாடு காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கையில் வெங்கையா நாயுடு வழங்கினார். தமிழக காவல்துறைக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடியை வழங்கிய துணை குடியரசுத் தலைவருக்கு சிறப்பு அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் காவல்துறையின் குதிரைப்படை பிரிவு உள்ளிட்ட அணிகளின் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தமிழ்நாடு காவல்துறைக்கு 2009 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிறப்பு கொடியை தேசிய அளவில் இதுவரையில் 5 மாநில போலீசாருக்கும் மட்டுமே ஜனாதிபதி கொடி வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் தமிழ்நாடு காவல்துறை முன்னோடியாக திகழ்கிறது என்று  குடியரசுத் துணைத் தலைவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறைக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடியை வழங்கிய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டினையும்  அளித்தார். நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன, தமிழக காவல்துறையில் தான் அதிக மகளிர் காவல் நியமனம் செய்யப்பட்டு வருவதாகவும் காணப்படுகிறது.

முன்னோடியாக திகழும் தமிழக காவல்துறை இணைய குற்றங்களை தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கடவுளர் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பாதுகாப்பாக மீட்டு வந்துள்ளது என்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

இயற்கையையும் கலாச்சாரத்தையும் நாம் பாதுகாத்தால் எதிர்காலம் நம்மை நன்றாக பாதுகாக்கும் என்றும் குடியரசு தின தலைவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top