ஜனாதிபதி தேர்தல்: திரெளபதி முர்மு முன்னிலையில் இருப்பதாக தகவல்!

குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக இருக்கும்  திரெளபதி  முர்மு முன்னணி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் வருகின்ற 24-ஆம் தேதியுடம் முடிவடைகிறது. இதனால் புதிய ஜானதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைப்பெற்றது.

அந்த வகையில் பாஜக சார்பில் திரவுபதி முர்மு போட்டியிட்டார். அதே போல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திரிணாமூல் காங்கிரஸின் யஷ்வந்த் சின்கா எதிர்கட்சி சார்பில் நிறுத்தப்பட்டார்.

இந்நிலையில் அனைத்து மாநிலங்களின் சட்டசபைகள் மற்றும் பார்லிமென்டில் ஓட்டுப்பதிவு நடைப்பெற்ற நிலையில் எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

இந்த சூழலில் தற்போது வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட  திரெளபதி  முர்மு முன்னணிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment