Connect with us

ஜூன் 18-ல் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல் : எத்தனை பேர் வாக்களிக்கிறார்கள் தெரியுமா?

Election Commission PTI 0

செய்திகள்

ஜூன் 18-ல் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல் : எத்தனை பேர் வாக்களிக்கிறார்கள் தெரியுமா?

இந்தியாவில் குடியரசு தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. குறிப்பாக அவர் குடியரசு தலைவர் பதவிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன.

இந்நிலையில் அடுத்த குடியரசு தலைவர் யார் என்பது குறித்த தேர்தல் தேதியை இன்று மாலை தெரிவிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியது. அதோடு தற்போது நடைபெறும் குடியரசு தேர்தலில் யார் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

தற்போது வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் மொத்தம் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜ்யசபா உறுப்புனர்கள் மற்றும் 4,033 எம்.எல்.ஏக்கள் என மொத்தமாக 4,809 நபர்கள் வாக்களிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்பாளர்க்களுக்கான பட்டியல் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top