Connect with us

தமிழகம் வரும் ஜனாதிபதி: 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டம்!

News

தமிழகம் வரும் ஜனாதிபதி: 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டம்!

387a45769c2359d6dc4a54db0b391155

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழகத்திற்கு வர உள்ளார். அவர் தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 

ஆகஸ்ட் 2-ஆம் தேதி தமிழகம் வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் அன்று காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட இருப்பதாகவும் 12.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருவார் என்றும் கூறப்படுகிறது

மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கலந்துகொள்ள உள்ளார். அதன்பின்னர் அவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்தை திறந்துவைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதன் பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஆகஸ்ட் 3ஆம் தேதி கோவை செல்ல இருப்பதாகவும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

மேலும் ஆகஸ்ட் 4,5,6 ஆகிய தேதிகளில் அவர் ஊட்டியில் தங்கியிருந்து அங்குள்ள ராணுவ கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top