தமிழகம் வருகிறார் ஜனாதிபதி: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

387a45769c2359d6dc4a54db0b391155

தமிழகத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வர இருப்பதாக தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் டெல்லி சென்று ஜனாதிபதியை நேரில் சந்தித்தார் என்றும் அப்போது சட்டப்பேரவையில் 100வது ஆண்டு தினம் மற்றும் சட்டப்பேரவை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படம் திறப்பு விழாவிற்கு வருகை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் 

இதனையடுத்து ஜனாதிபதி இந்த கோரிக்கையை ஏற்று ஆகஸ்டு 2 ஆம் தேதி சென்னை வர உள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படம் திறப்பு விழா நடைபெறும் என்றும் இந்த பணிக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்

முதல்வரின் அழைப்பை ஏற்று சென்னை வரவிருக்கும் குடியரசுத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment