
செய்திகள்
ஜனாதிபதி தேர்தல்-வந்த வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை!!
நம் இந்தியத் திருநாட்டில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நெருங்கி விட்டது. மேலும் அதற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் எதிர்க்கட்சியினர் ஒன்றாக சேர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஸ்வந்த் சிங்காவை நிறுத்தியுள்ளனர்.
அவர் இன்றைய தினம் சென்னை வந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவு கோர உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு மீது இன்று பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மொத்தம் 115 வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
நேற்று வரை மட்டும் சுமார் 115 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இன்றைய தினம் பரிசீலனையின் போது பல மனுக்கள் நிராகரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
