Connect with us

குடியரசுத் தலைவர் தேர்தல்: 22 எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் எழுதிய மம்தா!!

மம்தா பானர்ஜி

News

குடியரசுத் தலைவர் தேர்தல்: 22 எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் எழுதிய மம்தா!!

இந்தியாவிலேயே தற்போது எந்த ஒரு கூட்டணியும் இல்லாமல் மிகப் பெரிய கட்சியாக உருமாறியுள்ளது பாஜக. பாஜகவிற்கு மாற்று என்று எந்த ஒரு கட்சியும் இல்லாத அளவிற்கு பாஜகவின் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

இதன் மத்தியில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு மற்றுமொரு புதிய கூட்டணி கட்சி உருவாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது 22 எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை தேசிய கட்சிகள் இடையே ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக 22 கட்சித் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து எதிர்க்கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்து உள்ள அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூறி வைக்கப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்கட்சித் தலைவர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top