Connect with us

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் அழைப்பை புறக்கணித்து ஆம் ஆத்மி? டெல்லியில் ஆலோசனை!

Presidents of India Collage

செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் அழைப்பை புறக்கணித்து ஆம் ஆத்மி? டெல்லியில் ஆலோசனை!

இந்தியாவில் தற்போது ஜனாதிபதி தேர்தல் நெருங்கி உள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றாக கூட்டம் வேட்பாளரை அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. அதுவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுமார் 22 கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில் நம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய தினம் திருமாவளவன் ஒரு கிறிஸ்தவ வேட்பாளரை தான் எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை நடத்திக் கொண்டு வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பாக மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 22 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சிவசேனா, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ் , திமுக சார்பில் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தேசியவாத காங்கிரஸ்சார்பில் பிரபுல் பட்டேல், சமாஜ்வாதி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக தில்லியில் மம்தா பானர்ஜி ஆலோசனையில் ஆம்ஆத்மி பங்கேற்கவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top